வேண்டாம் இந்த காதல்…

Posted: by MassFareeth in லேபிள்கள்:

வேண்டாம் இந்த காதல்…

வாய்கள் பேசும் மொழிகள் மறந்து
கண்கள் பேசும் மொழிகள்
கண்டேன்..
சப்த்தம் ஊமையாகி சைகைகள்
உயிர் வாழ…
கண்ணாடிக்கும் உருவம் வந்து
எனைக்கண்டால்
உன் முகம் தெரியுதடி பெண்ணே….
காற்றில் கூட பரக்கிறேனடி நான்
உன்
என்னச்சிறகில் பறக்க முடியவிள்ளயடி…
கடலினை கூட கடப்பேனடி ஏனோ
உன் வீட்டு
வாசல்படியே என்னால் கடக்க முடியவில்லையடி…
தீயில் கூட வாழ்வேனே நான்
உன் தீண்டலில்
வாழ முடியவில்லையடி….
காற்றிடம் கூட மொழி பரிமாருகிறேனடி
நான்
உன்னை கண்டு அசையா
ஓவியமாகிறேனடி ஏனோ…
பயமேனும் பெரிய பூட்டினால்
பூட்டி
சிரிப்பெனும் சிறிய சாவியால்
திரிக்கிறாய்….
வெரித்திடும் பார்வையில்
வெயிலையும் மிஞ்சுகிறாய்…
குரலேனும் மென்மயில்
குளிரையும் மிஞ்சுகிறாய்…
நடையேனும் கலையினால்
நிலத்தையும் கொஞ்சுகிறாய்…
அழகேனும் சிறப்பினால்
வானவில்லையும் விலைக்கு
வாங்கினாய்…
பாவி என்னையோ
காதல் தீயில் தள்ளினாயடி..
அதனால்.
வெந்தேன் வெந்தேன்
வெந்து நொந்தேன்..
உனது சிந்தனையால் எனது
சிந்தனையே மறந்தேன்..
உனது சிரிப்பால்
எனது சிரிப்பே மறந்தேனன்..
உனது படிப்பால்
எனது படிப்பே துளைத்தேன்..
உனது திறமையால்
எனது திறமையே இழந்தேன்…
பாவி பாவி நீயோ
என்னை மறந்து
பிரிந்து சென்றுவிட்டாய்….
J.முகம்மது ஃபரீத்